நிலைபேறான நாடு-ஆரோக்கியமான நாளை என்ற தொனிப் பொருளை மையப் படுத்தி மாக்கந்துறை சேதன பயிர்ச் செய்கைக்கான விஷேட நிலையத்தால் கண்காட்சி ஒன்றை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் சேதன பசளை உற்பத்தி மற்றும் பாவனையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ்  விவசாயத் திணைக்களத்தின் சேதன பயிர் செய்கைக்கான விஷேட நிலையத்தினால் இது நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது

டிசம்பர் மாதம் 14 15 மற்றும் 16ம் திகதிகளில் சேதன பயிர் செய்கைக்கான விஷேட நிலைய வலாகத்தில் இந்த கண்காட்சி நடைபெற இருக்கின்றது

நிலைபேறான விவசாயம் , தரமான சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவித்தல்,  கொம்போஸ்ட் உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தல்,  சேதன பயிர் செய்கையை பிரபல்யப்படுத்தல்,  சேதன விவசாயத்தில் புதிய போக்குகளை அறிமுகப்படுத்தல்,  மற்றும் உள்ளுர் உற்பத்தியை பிரபல்யப் படுத்தல் இதன் பிரதான நோக்கமாகும்

சேதனப் பயிர் செய்கையை மேற்கொள்ளும் அரச மற்றும் தனியார் பிரிவூகள் இதனுடன் சம்பத்தப்படுவதாக உதவி விவசாயப் பணிப்பாளர் a.s.s. பிரதீப் ரணசிங்ஹ அவர்கள் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here